நோயாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து முழு விலக்கு: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்

டெல்லி: நாட்டில் இயல்பான நிலைமை திரும்பும் வரை நோயாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் பொது வார்டுகளில் சேருவதற்கான கட்டணம் மற்றும் பரிசோதனைகளில் இருந்து எய்ம்ஸ் விலக்கு அளித்துள்ளது. இதனை ஒரு உத்தரவு மூலம் எய்ம்ஸ் நிர்வாகம் கூறி உள்ளது.

இந்த உத்தரவின் படி, ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜான் ஆரோக்ய யோஜ்னா பயனாளிகள் எய்ம்ஸில் மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள். மேலும் அனைத்து மையங்களும் இந்த திட்டத்தின் கீழ் தேவையான மருந்துகளை பெறுவார்கள்.

இதில் அனைத்து மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை நுகர்பொருட்கள், தொகுப்பு அறுவை சிகிச்சைகள் தரப்படும். 14 நாட்களுக்கு தேவையயான அனைத்து மருந்து பொருட்களும் கொடுக்கப்படும்.

அதன் வரலாற்றில் முதல்முறையாக, அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனமான எய்ம்ஸ் மருத்துவமனை தமது புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் சேவைகளை நிறுத்தியது.

எது எப்படி இருப்பினும், மருத்துவமனை அதிகாரிகள் எய்ம்ஸ் துணைக் குழுவிடம் புறநோயாளிகள் மற்றும் அவசரகால அறுவை சிகிச்சை சேவைகளை தொடங்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர், நிர்வாகம் விரைவில் சேவைகளை மீண்டும் தொடங்கும் என்று தெரிகிறது.