பாட்னா: கிஷன்கஞ்ச் தொகுதியில், மஜ்லிஸ் கட்சி வேட்பாளர் வென்றிருப்பது ஆபத்தானது என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியிருக்கும் கருத்து சர்சைக்கு வித்திட்டிருக்கிறது.

நாடு முழுவதும் காலியாக உள்ள லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலும் நடத்தப்பட்டது.

மகாராஷ்ராவில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்கிறது. அரியானாவில் தனி பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தெடுக்கிறது. எப்படியும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிடும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கி இருக்கிறது.

இந் நிலையில், பீகாரிலும் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகின. அந்த முடிவுகள் குறித்து பல தலைவர்களும் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர்.

ஆனால், பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் தெரிவித்த கருத்து கடும் அதிர்வலைகளை உண்டு பண்ணி இருக்கிறது.

அவர் கூறியது இதுதான்: பீகார் மாநிலத்தில் கிஷன்கஞ்ச் தொகுதி இடைத் தேர்தலில் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி வென்றிருக்கிறது. அந்த கட்சியின் வேட்பாளர் கம்ரல் ஹோடா ஜெயித்திருக்கிறார்.

சமூக நல்லிணக்கத்துக்கு எதிரானது இந்த வெற்றி. அசாதுதீன் ஓவைசி கட்சி வந்தே மாதரத்தை எதிர்க்கும் கட்சி. அவர்களால் பீகாரில் சமூக நல்லிணக்கத்துக்கு பெரும் ஆபத்து வந்திருக்கிறது. பீகார் மாநில மக்கள் இதனை சற்றே சிந்தித்து பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.