ஐப்பசி மாதப் பிறப்பு: வரும் 17ந்தேதி சபரிமலை நடை திறப்பு

ஐப்பசி  தமிழ் மாதமம் தொடங்க இருப்பதையொட்டி,  சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும்17ம் தேதி திறக்கப்படும் என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்தின் போதும் பக்தர்கள் தரிசனத்திற்காக கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி ஐப்பசி மாதம் வரும் 18ந்தேதி தொடங்க உள்ளது. அதையொட்டி 17ந்தேதி மாலை பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன்  கோவில் நடை திறக்கப்படுகிறது.

கடந்த மாதம் கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம், நிலச்சரிவு காரணமாக,  சபரிமலை பகுதியில் உள்ள  திரிவேணி பாலம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. தற்போது, அந்த பகுதியில் தற்காலிகப் பாலம் கோயில் நிர்வாகம் சார்பாக அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளும் சரிசெய்யப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து சபரிமலையில் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஐப்பசி மாத பூஜைக்காக வரும் 17ம் தேதி பிரசித்து பெற்ற ஐயப்பன் சபரிமலை கோவில் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அன்றைய தினம்  மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதணை உள்ளிட்ட வழக்கமான சடங்குகள் செய்யப்பட உள்ளன..

அன்று மாலை கோயிலின் நடை திறக்கப்பட்டு, கோயிலின் தலைமைத் தந்திரி கண்டராரு ராஜீவரு கன்னிமாச பூஜைகளை நடத்துகிறார். மறுநாள் முதல், தந்திரிகள் பங்கேற்று ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம், உதயஸ்தமனா பூஜை, படிபூஜை, கலபாபிஷேகம் உள்பட பூஜைகள் நடைபெறும்.