மருத்துவ ஆம்புலன்ஸ் விமானம் தீப்பிடித்து விழுந்தது! விமானி பலி

பாங்காக்,

ந்தியாவை சேர்ந்த மருத்துவ ஆம்புலன்ஸ் விமானம் திடீரென தீப்பிடித்து விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 5 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ ஆம்புலன்ஸ் விமானம், தாய்லாந்து தலைநகர் பாங்காக் அருகே தீப்பிடித்து எரிந்த நிலையில் தரையில் மோதி நொறுங்கியது.

இந்த கோர விபத்தில், அந்த விமானத்தின்  விமானி அருணாக்சா நந்தி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 2 மருத்துவர்கள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் உடனடியாக  மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டு  ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்டு பாங்காக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் சைலேந்திரா, கோமல் ஆகிய இரண்டு மருத்துவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.