ஏர் ஆம்புலன்ஸ் சர்ச்சை: நிர்மலா சீத்தாராமன், ஓபிஎஸ் பதவி விலக ஸ்டாலின் வலியுறுத்தல்

 

சென்னை:

னி நபருக்காக  ராணுவ ஆம்புலன்சு விமானம் வழங்கிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், விமானத்தை உபயோகப்படுத்திய தமிழக துணைமுதல்வர்  ஓபிஎஸ்சும்  பதவி விலக வேண்டும் என்றும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சமீபத்தில் தனிப்பட்ட காரணமாக டில்லி சென்ற தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம், டில்லி விமான நிலையத்தில்,  தனது தம்பியின் உடல்நலம் கருதி ஏர் ஆம்புலன்ஸ் வழங்கிய மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு நன்றி கூற வந்திருப்பதாக தெரிவித்தார்.

ஆனால், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், ஓபிஎஸ்-ஐ சந்திக்க மறுத்து விட்டார். ஓபிஎஸ் மீது வழக்குகள் இருப்பதால், அவரை சந்திக்க மறுத்ததாக கூறப்பட்டது. இதன் காரணமாக ஓபிஎஸ் சென்னை திரும்பினார்.

தமிழகத்தின் துணைமுதல்வரை மத்திய அமைச்சர் சந்திக்க மறுத்தது அரசியல் கட்சியினர் மட்டத்தில் சலசலப்பை உருவபாக்கியது.

இந்த நிலையில், ஓபிஎஸ் தம்பி உடல்நிலை காரணமாக ராணுவ ஆம்புலன்ஸ் விமானம் வழங்கிய விவகாரம் சர்ச்சையை எழுப்பி உள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், கருணாநிதி குறித்து வெளிவரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், ஓபிஎஸ் விவகாரத்தில் உண்மை வெளிவந்துள்ளது.  தனிநபர் ஒருவருக்காக ராணுவ விமானத்தை எப்படி கொடுத்தார்கள் என்பது மர்மமாக உள்ளது என்றார்.

அந்த ராணுவ விமானத்தை பயன்படுத்திய குற்றத்திற்காக துணை முதல்வர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலக வேண்டும். அதுபோல அந்த விமானத்தை அனுப்பிய நிர்மலா சீதாராமனும்  மத்திய மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வலயுறுத்தினார்.

கவர்னருடனான சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்ட கேள்விக்கு,  இந்த ஆட்சியில் நடந்துள்ள ஊழல் குறித்து  மனு கொடுத்துள்ளேன். விரைவில் இந்த ஆட்சி அகற்றப்படும். அதோடு ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்சும் சிறை செல்வார்கள் என்றார்.

எடப்பாடியின் தேர்தலை சந்திக்க தயார் என்ற கேள்விக்கு, அவர்கள் திட்டமிட்டு கொள்ளை அடிப்பதற்குத் தான் தயாராக உள்ளனர்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.