வெயில் கொடுமை: உ.பி. கோவிலில் பிள்ளையாருக்கு ‘ஏர்கூலர்’ வசதி

கான்பூர்:

நாடு முழுவதும் அதிகரித்து வரும் வெயில் காரணமாக உ.பி.மாநிலத்தில் சாமி சிலை அமைந்திருக்கும் கருவறையில்  ஏர்கூலர் வசதி செய்யப்பட்டுள்ளது. இது பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாடு முழுவதும் வெயினின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் வெப்பம் காரணமாக கடும் புழுக்கத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

இதன் காரணமாக, வெயிலின் தகிப்பை தணிக்க சாமி சிலைகள் அமைந்துள்ள கருவறை பகுதியில் ஏர்கூலர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வசதி உத்தரபிரதேச மாநிலம்  கான்பூர் நகரில் உள்ள பிள்ளையார் கோயில் ஒன்றில் ஏர் கூலர்களை பொருத்தியுள்ளனர்.

வெப்பத்தைத் தணித்து, குளிர்ந்த காற்றை பிள்ளையாருக்கும், பூஜை செய்யும் பூசாரிக்கும் சேர்த்து, கணேசனை தரிசிக்க வரும் பக்தர்களும் பரவசப்படும் வகையில்  ஏர் கூலர்களை கோயில் நிர்வாகம் அமைத்துள்ளது.

இது பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.