சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக  வடக்கு ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, சத்திஸ்கர் மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

வங்கக்கடலில் உருவான  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை வடக்கு ஆந்திர பிரதேச கடற்கரை ஒட்டி காகிநாடாவில் கரையை கடந்தது. இதன் காரணமாக கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலத்தில் கனமழை பெய்ததுஃ
இ்ந்த நிலையி்ல அந்தமான் மற்றும் அதனை ஒட்டி உள்ள கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஆந்திரா நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான இடங்களில் லோசான மழை பெய்ய வாய்ப்பு உள்ள நிலையில், தெலுங்கானாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிமை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கர்நாடகாவின் உட்புற பகுதிகள், தெற்கு கோங்கன், கோவா, மத்திய மகாராஷ்டிரா, மராதாவாடா, மிகமிக  கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், வடக்கு ஆந்திர பிரதேசம், ராயல்சீமா, கர்நாடகாவின் தெற்கு உட்புற பகுதி, தெற்கு ஒடிசா, தெற்கு சத்தீஸ்கர், விதர்பா பகுதிகள் தனித்து விடப்படும் அளவிற்கு மிகமிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைவதால், தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்.  காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கக் கூடும் என்றும்.  வேலூர், திருப்பத்தூர்,ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், கோவை, தேனி,திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுஃ