டகொரியா
டகொரியா ஏவுகணை செலுத்தி சோதிக்கும் போது அதே வழியாக வெறும் 100 கிமீ தூரத்தில் வானில் ஒரு ஏர் ஃப்ரான்ஸ் விமானம் கடந்து சென்றது பரபரப்புக்குள்ளானது

உலகின் பல நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி வட கொரியா தொடர்ந்து தனது ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது.  அது போல தற்போது நடத்திய ஒரு சோதனையின் போது ஒரு விமானம் வெறும் 100 கிமீ தூரத்தில் ஏவுகணை செலுத்த சுமார் 10 நிமிட நேரம் இருக்கும் போது அதேபாதையில் கடந்து சென்றுள்ளது.  இந்த விமானம் டோக்கியோவிலிருந்து பாரிஸ் சென்றுக் கொண்டிருந்த சமயத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

எர் ஃப்ரான்ஸ் நிறுவனம் இது பற்றி தெரிவிக்கையில், விமானத்துக்கு ஒன்றும் சேதம் இல்லை என தெரிவித்துள்ளது.  மேலும் விமானம் வழக்கமாக செல்லும் பதையில் தான் சென்றது எனவும் ஏவுகணை அந்த விமானத்தை தாக்கி இருக்க வாய்ப்பில்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதே நேரத்தில் ஏர் ஃப்ரான்ஸ் நிறுவனம் தனது விமானம் செல்லும் பாதையை மாற்றியமக்கக்கூடும் என அதிகாரபூர்வமற்ற செய்திகள் வெளியாகி வருகின்றன.