ரியாத்:

திருவனந்தபுரம் செல்லும் ஏர் இந்தியா ஏஐ 928 விமானம், ரியத்தின் மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கிளம்பியதாக ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் உள்ள இந்திய மாணவர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள், வந்தே பாரத் என்ற திட்டத்தின் கீழ், கடந்த 7 ஆம் தேதி முதல் சிறப்பு விமானங்கள் மூலம், இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இந்தநிலையில், சவூதி அரேபியாவின் தோஹா, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ, ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பர்ன் உள்ளிட்ட நகரங்களில் இருந்து, 4 விமானங்கள் மூலம், மேலும் 800 க்கும் மேற்பட்டோர் இந்தியா அழைத்து வரப்பட்டதாக, விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இந்த விமானங்கள் டெல்லி, கயா, கொச்சி, அஹமதாபாத் போன்ற நகரங்களுக்கு வந்தன. வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் அனைவரும் சிறப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு, கொரோனா தொற்றுக்கான மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருவனந்தபுரம் செல்லும் ஏர் இந்தியா ஏஐ 928 விமானம், ரியத்தின் மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கிளம்பியதாக ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவனந்தபுரம் செல்லும் ஏர் இந்தியா ஏஐ 928 விமானம், ரியத்தின் மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கிளம்பியுள்ளதாகவும், இந்த விமானத்தில் பிறந்த குழந்தைகள் 12 பேர் உள்பட 332 பயணிகள் பயணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.