ஏர் இந்தியா – டிக்கெட் முன்பதிவு துவக்கம் எப்போது?

புதுடெல்லி: குறிப்பிட்ட வழித்தடங்களுக்கான உள்நாட்டு விமானப் பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவு மே 4ம் தேதியும், வெளிநாட்டுப் பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஜுன் 1ம் தேதியும் தொடங்கும் என்று அறிவித்துள்ளது ஏர் இந்தியா.

ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது; தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் சூழ்நிலையில், உள்நாட்டு பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவு மே 3ம் தேதி வரையிலும், வெளிநாட்டு பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவு மே மாதம் 31ம் தேதி வரையிலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறிப்பிட்ட உள்நாட்டு பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவு மே மாதம் 4ம் தேதியில் இருந்தும், வெளிநாட்டு பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஜூன் மாதம் 1ம் தேதியிலிருந்தும் துவங்கவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலால், உலகெங்கிலும் விமானப் போக்குவரத்து முடங்கியுள்ளதால், பல விமான நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. நிலைமை இன்னும் சிலகாலம் நீடித்தால், பல விமான நிறுவனங்கள் திவாலாகும் சூழல் ஏற்படலாம் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.