கொரோனா அச்சம்: இத்தாலி, இலங்கை உள்பட மேலும் 6 நாடுகளுக்கு சேவையை ரத்து செய்தது ஏர் இந்தியா…

டெல்லி:

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே பல நாடுகளுக்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது, இத்தாலி, இலங்கை உள்பட மேலும் 6 நாடுகளுக்கு சேவையை ரத்து செய்துள்ளதாக ஏர் இந்தியா அறிவித்து உள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பீதியை கிளப்பி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளின் விசா மற்றும் வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ள நிலையில் பல நாடுகளுக்கு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவனம்  நேற்று ரோம் மற்றும் மிலனுக்கு சேவைகளை ரத்து செய்வதாக அறிவித்திருந்த நிலையில், இன்று இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், தென்கொரியா, இலங்கை உள்பட  6 நாடுகளுக்கும் இந்த மாதம் 30ந்தேதி வரை  விமான சேவையை ரத்து செய்துள்ளதாக அறிவித்து உள்ளது.