உள்நாடு, வெளிநாடு விமான சேவைகள் தொடங்கும் தேதியை அறிவித்தது ஏர் இந்தியா…

டெல்லி:

நாடு முழுவதும் ஊரடங்கு அமே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், உள்நாடு, வெளிநாடுகளுக் கான விமான சேவைகள் அனைத்தும் வரும் மே 3 ஆம் தேதி வரை ரத்து செய்யபட்டிருந்தது.

இந்த நிலையில், உள் நாடு, வெளிநாடு விமான சேவைகள் தொடங்கும் தேதியை விமான போக்குவரத்துதுறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.

கொரோனா வைரஸ் பரவரை தடுக்கும் நோக்கில்  உள்நாடு, வெளிநாடு விமான சேவைகள் முடக்கப்பட்டன.  இவை மீண்டும் 14ந்தேதிக்கு  பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து,  மே 3 ஆம் தேதி வரை, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், மே 4 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும்  என்றும்,  ஜூன் 1 ஆம் தேதி முதல் சர்வதேச விமான சேவை தொடங்கப்படும் என்றும் ஏர் இந்தியா அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

You may have missed