லண்டனுக்கான ஏர்இந்தியா விமான முன்பதிவு இன்று மாலை தொடங்குகிறது…

டெல்லி:

ந்தே பாரத் மிஷன் மூலம் லண்டன் செல்வதற்கான ஏர்இந்தியா விமான முன்பதிவு இன்று மாலை தொடங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் உள்ள அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் நாடுதிரும்ப ஏதுவாக வும், அவசரகாலத்தில் பயணிக்கும் வகையிலும் அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் சர்வதேச விமானங்கள் இந்தியா வர அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்கு வரத்துத்துறை அமைச்சகம் அண்மையில் தெரிவித்து

அமெரிக்க விமான நிறுவனமான யுனைடெட் ஏர்லைன்ஸ் ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே 18 விமானங்களையும், பிரான்ஸ் விமான நிறுவனமான ஏர் பிரான்ஸ் டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் பாரிஸ் இடையே ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 1 வரை 28 விமானங்களை இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்படி,  டெல்லியில் இருந்து லண்டன் (Delhi – London) உள்பட சர்வதேச விமானங்களுக்கான விமான முன்பதிவு இன்று மாலை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை முதல் லண்டனுக்கு விமானங்களை முன்பதிவு செய்யத் தொடங்குவதாக அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

மிஷன் வந்தே இந்தியா சேவையின் கீழ் டெல்லி மற்றும் மும்பையில் இருந்து லண்டன் வரை தொடங்கப்படுவதாக ஏர் இந்தியா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தஉள்ளது.

இந்த விமானங்களின் முன்பதிவு இன்று மாலை 6 மணி முதல் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பையிலிருந்து லண்டன் செல்லும் விமானங்களும் கொச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன. டெல்லியில் இருந்து பறக்கும் விமானங்கள் அமிர்தசரஸுடன் இணைக்கப்பட்டுள்ளன.

வந்தே பாரத் மிஷனின் நான்காவது கட்டத்தில் மற்ற நாடுகளுக்கு விமானங்களைத் தொடங்க திட்டம் உள்ளது.