புதுடெல்லி: நிதி பற்றாக்குறை காரணமாக ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  இண்டிகோ மற்றம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்கள் இரண்டாவது காலாண்டில் பெரிய அளவிலான இழப்பை அறிவித்தன. ஏர் இந்தியா அரசாங்கத்தின் புதிய முதலீட்டு முயற்சிகள் மூலம் தனது பயணத்தைத் தொடர போராடுகிறது.

இந்த போராட்டம் ஒரு புறமிருக்க, இன்னொரு புறம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக நிகர லாபத்தி பதிவு செய்ய உள்ளது.  2016 நிதியாண்டில், முதலில் ஏர் இந்தியா துணை நிறுவனம்  லாபகரமாக மாறியது. அப்போதிருந்தே, அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்துதல் மற்றும் தனது செலவுகளை கட்டுக்குள் வைத்திருப்பதிலும் ஒரு சமன்பாட்டை ஏற்படுத்தியிருந்த்து.

2019/2020 நிதியாண்டில் ரூ.500 கோடி லாபத்தை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிக்க உள்ளது என்று அந்நிறுவனத்தின் ஆதாரபூர்வமான தகவல்களை, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது. இது இந்நிறுவனம் ஒரு வருடத்திற்கு மன்பு சம்பாதித்திருந்த ரூ.164 கோடியிலிருந்து ஒரு பெரிய பாய்ச்சலாக இருக்கும்.  உண்மையில் கூறப்போனால், அந்நிறுவனத்தின் வரலாற்றிலேயே இது மிக உயர்ந்த லாபமாகும்.

இத்துறையில் உள்ள பெரிய பெயர்கள் தொடர்ந்து பறப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கையில், பட்ஜெட் விமான நிறுவனம் எவ்வாறு லாபம் ஈட்டுவதில் சாதனையை எட்ட முடிகிறது?

25 விமானங்களைக் கொண்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஆண்டுக்கு 4 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை சுமந்தது. மேலும் அதன் விமானம் ஒரு நாளைக்கு சராசரியாக 14 மணி நேரம் பறக்கிறது. இது, பெரும்பான்மையான தனது சக விமானங்கள் பறக்கும் 11 மணி நேரத்தை விட அதிகமாக உள்ளது.