181 இந்தியர்களுடன் அபுதாபியிலிருந்து கொச்சி வந்திறங்கியது ஏர் இந்தியா

--

கொச்சி :
வெளிநாடுகளில் திரும்பும் இந்தியர்கள் இன்று அபுதாபியிலிருந்து முதல் விமானம் கொச்சி வந்தடைந்தது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் IX 452 மூலம் 181 பயணிகளுடன் கொச்சியில் தரை இறங்கியது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு காரணமாக விமான சேவைகள் முடங்கின. இதனால் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். இவ்வாறு பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 64 விமானங்கள் தயார்ப்படுத்தப்பட்டு அவர்களை மீ்ட்டு அழைத்து வரும் நடவடிக்கையை மத்திய அரசு துவங்கியுள்ளது. இதன்படி ஏர்இந்தியா விமானம் துபாய் சென்றடைந்து. அங்கு 49 கர்ப்பிணிகள் உள்பட 181 இந்தியர்களை மீட்டு கொச்சிக்கு புறப்பட்டது. இதன்படி இன்று இரவு 10.30 மணி அளவில் கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையம் வந்திறங்கியது.

இந்நிலையில், ஊரடங்கால் சொந்த நாடுகளுக்கு செல்ல முடியாமல் இந்தியாவில் சிக்கியுள்ளவர்களை திருப்பி அனுப்பி வைப்பதற்காக ஏர்இந்தியா நிறுவனம் முன்பதிவு மையத்தினை திறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.