டெல்லியிலிருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு வழக்கமாகச் செல்லும் அட்லாண்டிக் கடல் பகுதி வழியாக செல்லாமல் பசிபிக் கடல் வழியாக மார்க்கத்தை மாற்றி உலகின் மிக நீளமான நான்-ஸ்டாப் விமான பயணத்தை குறுகிய நேரத்தில் இயக்கி ஏர் இந்தியா சாதனை படைத்திருக்கிறது.

air_india

பசிபிக் கடல் மார்க்கம் அட்லாண்டிக் கடல் மார்க்கத்தைவிட 14,00 கி.மீ தூரம் அதிகம், அதாவது மொத்த பயண தூரம் 15,300 கி.மீ ஆகும். தூரம் அதிகமாக இருந்தாலும் தற்போது காற்று வீசும் திசையிலேயே விமானம் செல்வதால் விமானம் இரண்டு மணிநேரங்கள் முன்கூட்டியே இலக்கை சென்றடைந்துவிட முடியும்.
பூமி மேற்கிலிருந்து கிழக்காக சுற்றுகிறது, காற்றும் அதே திசையில் அடிப்பதால் அதே திசையில் செல்லும் விமானத்தால் மிக குறைந்த எரிபொருள் செலவில் மிக விரைவாக செல்ல முடியும். எதிர்திசையில் சென்றால் விமானத்தின் வேகம் குறைந்துவிடும், எரிபொருள் மிகவும் அதிகமாகவும் செலவாகும்.
அட்லாண்டிக் மார்க்கமாக செல்லும்போது 13,900 கி.மீ தூரமாக இருந்த இப்பயணம் பசிபிக் மார்க்கமாக மாற்றப்பட்ட பின்னர் 15,000 கி.மீ தூரமாக மாறிவிட்டபடியால் இதுவே உலகின் மிக நீண்ட நான்-ஸ்டாப் விமான பயணதூரம் ஆகும். இதற்கு அடுத்த இடத்தில் எமிரேட்ஸ் நிறுவனத்தில் துபாய்-ஆக்லாந்து நான்-ஸ்டாப் விமானம் சுமார் 14,120 கிமீ தூரம் கொண்டது. இன்னும் இரண்டாண்டுகளில் சிங்கப்பூர் தனது பிரமாண்டமான சிங்கப்பூர்-நியூயார்க் நான்-ஸ்டாப் விமானத்தை இயக்கவிருக்கிறது. அதன் தூரம் 16,500 கி.மீ ஆகும். பயண நேரம் 19 மணி நேரங்கள். அந்த விமானம் தனது சேவையை தொடங்கும் வரை ஏர் இந்தியாவின் டெல்லி-சான்பிரான்சிஸ்கோ பயணமே உலகின் மிக நீண்ட நான்-ஸ்டாப் விமான பயணமாக இருக்கும்.