முதன்முதலில் பெண்களால் இயக்கப்பட்ட இந்திய விமானம்- உலக சாதனை!

டெல்லி: 

ர் இண்டியா விமானம் முழுக்கமுழுக்க பெண்களால் இயக்கப்பட்டு உலகசாதனை புரிந்துள்ளது. வரும் 8 ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்தநாளை சிறப்பிக்க, முதல்முறையாக விமானத்தில் பைலட் முதல் அனைத்துப் பணிகளிலும் பெண்களை ஈடுபடுத்த ஏர் இண்டியா விமானம் தீர்மானித்தது.

அதன்படி இயக்கப்பட்ட அந்தவிமானம்  கடந்த பிப்ரவரி 27ம் தேதி டெல்லியிலிருந்து புறப்பட்டு   சான்பிரான்ஸிஸ்கோ நகரை நோக்கி பறந்தது.

பசிபிக் பெருங்கடல் வழியாக பயணித்த அந்த விமானம் சான்பிரான்ஸிஸ்கோ சென்றடைந்தது. இதையடுத்து பூமியை முழுமையாக சுற்றும் விதமாக சான்பிரான்ஸிஸ்கோ நகரிலிருந்து அட்லாண்டிக் பெருங்கடல் வழியே மீண்டும் நேற்று டெல்லி வந்தடைந்தது.

ஒரு விமானம் முழுக்க முழுக்க பெண்களால் இயக்கப்பட்டது உலகில் இதுதான் முதல்முறை என்றும்  கின்னஸ் உலக சாதனை விருதுக்காக விண்ணப்பித்திருப்பதாகவும் டெல்லி விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.