Random image

தவறான ஓடுதளத்தில் இறங்கிய ஏர் இந்தியா விமானம்…..பயணிகள் தப்பினர்

மாலி:

ஏர்இந்தியா விமானம் தவறான ஓடுதளத்தில் இறங்கிய சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் 136 பயணிகளுடன் இன்று மாலத்தீவு தலைநகர் மாலி நகருக்கு புறப்பட்டுச் சென்றது. மாலை 4.42 மணியளவில் மாலி விமான நிலையத்தில் தரை இறங்கிய அந்த விமானம் வழக்கமான ஓடுபாதையை விட்டு விலகி புதிதாக கட்டப்பட்டு வரும் ஓடுபாதையில் இறங்கியது.

இதனால் அந்த விமானத்தின் டயர்கள் பஞ்சர் ஆனது. அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை. பயணிகளும் உயிர் தப்பினர். பின்னர் விமானம் அங்கிருந்து இழுத்து செல்லப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். டயர்களை மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

You may have missed