ஏர் இந்தியாவின் புதிய விமான சேவை

ஏர் இந்தியா பயணிகளுக்கு உயர்தர பயணத்தை வழங்குவதற்காக மறுசீரமைக்கப்பட்ட சேவையை தொடங்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட ஏர் இந்தியா விமான சேவையில் சீருடைகள், உணவுகள் மற்றும் உள் அலங்காரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. சர்வதேச விமான நிலையங்களுக்கு செல்லும் விமானங்களில் போக்குவரத்து வர்த்தகத்தை 60 சதவிகிதத்தில் இருந்து 80 சதவிகிதம் வரை உயர்த்தும் விதமாக இத்தகைய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
air insia
இத்தகைய சேவைக்கு ”மஹாரஜா டைரக்ட்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.4 கோடியாக இருந்த வருவாய் ரூ.6.5 கோடியாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு செயல்பாட்டில் இருந்த மஹாராஜா மஸ்கட் என்ற சேவை 7பில்லியன் டாலர் கடனை பெற்றுள்ளது என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

சர்வதேச விமான நிலையங்களில் 17 சதவிகிதம் பங்கு சந்தையாக உள்ளது. இது சர்வதேச அளவில் 43 இடங்களில் வாரத்திற்கு 2500க்கும் மேற்பட்ட பறந்துள்ளது. அதாவது, ஏர் இந்தியாவின் வர்த்தக சேவையை சீரமைப்பது ஏர் லைன்சின் வியாபார சேவைக்கு இணையான ஒரு முயற்சியாக உள்ளது.

”முன்னதாக செலுத்திய அதே கட்டணத்தில் பயணிகள் மிக சிறந்த அனுபவத்தை பெற முடியும், அதற்காக அவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த தேவையில்லை” என சிவில் விமான போக்குவரத்தின் செயலாளர் ஆர்.என். சௌபே கூறியுள்ளார். மேலும் ஏர் இந்தியாவின் வருவாய் 20 சதவிகிதம் வரை உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் சௌபே தெரிவித்தார். ஏர் இந்தியாவை சிறந்த நிறுவனமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக விமானத்துறையின் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஏர் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பிரதீப் சிங் கரோலா கூறுகையில், ”அமெரிக்க விமான சேவைகளில் உள்ளது போல் முதல் வகுப்பு மற்றும் வர்த்தக வகுப்புகள் ஜூலை இறுதிக்குள் மேம்படுத்தப்படும், போயிங் 787 விமான சேவை பெரும்பாலும் ஐரோப்பிய கண்டங்களுக்கு செல்லும்” என்று தெரிவித்தார்