டில்லி

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ. 250 கோடி வரை பற்றாக்குறை ஏற்படுவதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கூறி உள்ளது.

ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு கடன் எக்கச்சக்கமாக உள்ளது தெரிந்ததே.   அந்த கடனை அடைக்க இந்நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க அரசு முடிவு செய்தது    ஆனால் அரசு எதிர்பார்த்த விலை கிடைக்காததால் பங்குகளை அரசால் விற்க முடியவில்லை.  மேலும் ஏர் இந்தியா விமானங்கள் அடிக்கடிநிறுத்தி வைக்கப்படுவதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், “மாதந்தோறும் ரூ.250 கோடி வரை நிதிப் பற்றாக்குறை ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஏற்பட்டு வருகிறது.    இந்த நிதி பற்றாக்குறை காரணமாக பாதிக்கப்பட்ட பல விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.   தற்போது உள்நாட்டிலேயே பழுது பார்க்கும் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

முன்பு வெளிநாட்டில் செய்யப்பட்டு வந்த இந்த பணிகள் தற்போது இங்கேயே செய்யப்படுவதால் செலவு குறைந்துள்ளது.   ஆயினும் கடன் சுமை அதிகம் உள்ளதால் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு இந்த செலவு குறைவால் எந்த பயனும் கிட்டவில்லை.    அதனால் நிதிப் பற்றாக்குறை குறைய வாய்ப்பே இல்லாமல் உள்ளது”  என அறிவித்துள்ளது.