மோசமான விமான சேவையில் ஏர் இந்தியாவுக்கு 3வது இடம்

நியூயார்க்:

விமானங்களை குறித்த நேரத்தில் சரியாக இயக்காத விமானங்களின் பட்டியலில் இந்தியாவின் ஏர் இந்தியா விமான நிறுவனம் 3ம் இடத்தை பிடித்துள்ளது.

சர்வதேச அளவில் விமானத்தை சரியான நேரத்துக்கு இயக்குதல் மற்றும் ரத்து செய்தல் குறித்த கருத்து கணிப்பை அமெரிக்காவை சேர்ந்த விமான போக்குவரதது நிறுவனம் ஒன்று ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த தகவல் அந்தந்த விமான நிறுவனங்களே மாதந்தோறும் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் வெளியிடப்படுகிறது.

இந்த வகையில் கடந்த 2016ம் ஆண்டில் 10 மோசமான விமான நிறுவனங்கள் பட்டியலை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்:
மிக மோசமான சேவை….
முதல் இடம்: இஐ ஏஐ (இஸ்ரேல் ஏர்லைவ்ஸ்)&56%
2ம் இடம் ஐஸ்லேண்ட் ஏர்லைன்ஸ்&41.05%
3ம் ஏடம் ஏர் இந்தியா&38.71%
4வது இடம் பிலிப்பைன் ஏர்லைன்ஸ்&38.33%
5ம் இடம் ஏசியானா ஏர்லைன்ஸ்&37.46%
6ம் இடம் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்&35.8%
7ம் இடம் ஹாங்காங் ஏர்லைன்ஸ்&33.42%
8ம் இடம் ஏர் சைனா&32.73%
9ம் இடம் கொரியன் ஏர்&31.74%
10ம் இடம் ஹய்னன் ஏர்லைன்ஸ்&30.3%

2016ம் ஆண்டின் சிறந்த விமான சேவை நிறுவனங்கள் பட்டியல்

முதல் இடம் கேஎல்எம்&11.47%
2ம் இடம் லிபியா&11.82%
3ம் இடம் ஜேஏஎல்&12.2%
4ம் இடம் கத்தார் ஏர்வேஸ்&13.66%
5ம் இடம் ஆஸ்திரியன்&14.26%
6ம் இடம் ஏஎன்ஏ&14.46%
7ம் இடம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்&14.55%
8ம் இடம் டெல்டா ஏர்லைன்ஸ்&14.83%
9ம் இடம் டிஏஎம் லின்ஹாஸ் ஏயிரியாஸ்&14.93%
10ம் இடம் கன்தாஸ்&15.7%

பல தரப்பட்ட 500 வழிகளில் இந்த தகவல் சேகரிக்கப்பட்டது. விமானநிலையத்தில் நின்ற நேரம், ஓடுதளத்தில் ஓடிய நேரம், ரேடார் கருவிகள், விமான நிறுவன பதிவேடுகள், விமானநிலைய தகவல்கள், நிர்வாக அலுவலங்கள் மூலம் இந்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. இத்தகவலை விமான போக்குவரத்து மற்றும் பகிர்மான விமானநிலை என்ற அந்த நிறுவன துணைத் தலைவர் ஜிம் ஹெட்சல் தெரிவித்துள்ளார்.