டில்லி

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலை அடுத்து அங்குள்ள இந்தியர்களை அழைத்து வர ஏர் இந்தியா நிறுவனம் விமானச் சேவையை தொடங்கி உள்ளது.

சீனாவில் பரவி வரும் கொனோரா என்னும் ஆட்கொல்லி வைரஸ் தாக்குதலில் இதுவரை சுமார்170 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.   உலக சுகாதார நிறுவனம் அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது.  அதையொட்டி ஏர் இந்தியா நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது

அந்த அறிவிப்பில் காணப்படுவதாவது.

கொரோனா வைரஸ் பரவுதல் குறித்து உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது.   இது குறித்து சில விவரங்களை தற்போது பகிர்கிறோம்.

1.     ஏர் இந்தியா சார்பில் இன்று ஊகான் நகருக்கு ஒரு விமானம் 325 இந்தியர்களை அழைத்து வர விமானம் அனுப்புகிறது.   அங்குள்ள இந்தியர்கள் அனைவரையும் அழைத்து வரும் வரை இந்த சேவை தொடரும்.

2.     இன்று மதியம் 12.30 மணிக்கு டில்லியில் இருந்து போயிங் 747- 400 விமானம் ஒன்று ஊகான் நகருக்கு கிளம்புகிறது .

3.     டில்லியில் இருந்து ஊகான் நகருக்குச் செல்ல சுமார் 6மணி நேரம் ஆகும்.

4.     ஏர் இந்தியா விமானம் மும்பையில் இருந்து சுகாதார அமைச்சகம் வாங்கி வைத்துள்ள சிறப்பு மருத்துவ சாதனங்களை எடுத்துக் கொண்டு கிளம்ப உள்ளது.

5.     ஊகான் நகரில் காத்திருக்கும் பயணிகளில் 325 பேரை முதல்  அட்டமாக இன்று இந்த விமானம் அழைத்து வரும.

6.     கொரோனா வைரஸ் குறித்த அறிகுறிகள் இல்லதவர்களை மட்டுமே முதலில் அழைத்து வர உள்ளோம்.

7.     இந்த சிறப்பு விமானத்தில் பயணம் செய்யும் விமான குழுவினர் முக கவசம், கையுறை மற்றும் தொற்று நோய்த் தடுப்பு ஸ்பிரே ஆகியவற்றுடன் பயணிப்பார்கள்.  அத்துடன் அவர்கள் ஊகான் நகரத்தில் விமானத்தில் இருந்து இறங்க மாட்டார்கள்.

8.     பயணிகளுடன் கூடிய வரை குழுவினர் பேசக்கூட மாட்டார்கள்.  பயணிகளுக்கான உணவு மற்றும் குடிநீர் இருக்கையில் வைத்திருக்கப்படும்.

9.     இந்த குழுவில் 2 மருத்துவர்கள், 2 பொறியாளர்கள், மற்றும் தேவையான ஊழியர்கள் மட்டுமே இருப்பார்கள்

10.  மருத்துவ உபகரணங்கள் முழுமையாக வந்து சேர்ந்த பிறகே இந்தவிமானம் கிளம்பும்

என அறிவிக்கப்பட்டுள்ளது.