டில்லி

ர் இந்தியா நிறுவனம் பங்குகளை விற்க முடியாததால் செலவை குறைத்து வரவை பெருக்க திட்டம் தீட்டி உள்ளது.

அரசின் விமான சேவை நிறுவ்னமான ஏர் இந்தியா கடன் சுமையால் மிகவும் தவித்து வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சுமார் ரூ.54000 கோடி கடன் உள்ளது. அதில் ரூ. 29000 கோடிக்கு அரசு பொறுப்பு ஏற்றுக் கொண்டது. ஆயினும் கடன் சுமையில் இருந்து நிறுவனம் மீள முடியாத நிலையில் இருந்தது. எனவே இந்த நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க அரசு முடிவு செய்து டெண்டர் கோரியது.

ஆனால் எதிர்பார்த்த விலைக்கு பங்குகளை வாங்க எந்த ஒரு நிறுவனமும் முன் வரவில்லை. அதனால் பங்குகள் விற்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தற்காலிகமாக சேவைகளை முழுமையாக நிறுத்திக் கொண்டதால் ஏர் இந்தியா உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் பயனடைந்துள்ளன. உடனடியாக ஏர் இந்தியா நிறுவனம் ரு.4500 கோடி கடனை அடைக்க வேண்டிய நிலையில் உள்ளது.

எனவே ஏர் இந்தியா நிறுவனம் தனது வருமானத்தை பெருக்கி செலவைக் குறைக்க திட்டங்கள் தீட்டி வருகின்றன. இந்த திட்டத்தில் லாபகரமான தடங்களில் புதிய விமான சேவை தொடங்குவது முக்கியமான ஒன்றாகும். இது எந்த தடங்கள் என ஏர் இந்தியா என்னும் தெரியப்படுத்தவில்லை.

இந்த மாதம் 5 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையில் ஏர் இந்தியா பங்குகள் விற்கப்பட மாட்டாது என தெரிவித்த போதிலும் எவ்வித நிதி ஒதுக்கீடும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..