நாளை முதல் அமெரிக்கா, லண்டன் சிங்கப்பூருக்கு பறக்கிறது ஏர் இந்தியா விமானம்… முன்பதிவு தொடக்கம்…

டெல்லி:

நாளை முதல் அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூருக்கு ஏர்இந்தியா விமானங்களை இயக்குகிறது. இதையடுத்து, முன்பதிவு தொடங்கி உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமா கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பயணிகள் சேவை விமானம் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. தற்போது ஒருசில மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் கொரேனா பரவல் தடுக்கப்பட்டு உள்ளது. அதுபோல சில நாடுகளிலும் கொரோனோ பரவல் கட்டுக்குள் வந்துள்து.

இந்த நிலையில், பயணிகளின் நலன் கருதி  ஏர் இந்தியா விமானம் மீண்டும் தனது சேவையை நாளை (8ந்தேதி) முதல் தொடங்குவதாக அறிவித்து உள்ளது. முதல்கட்டமாக சிங்கப்பூர், லண்டன் மற்றும் அமெரிக்காவுக்கு விமானத்தை இயக்குகிறது.  அங்கு செல்ல விரும்புபவர்கள் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிற நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களை இந்திய கொண்டு வரும் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் இந்த விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

வளைகுடா நாடுகளுக்கும் விமானங்களை இயக்குவதற்கான அறிவிப்பை ஏர் இண்டியா நிறுவனம் இன்று வெளியிடலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தும் மார்க்கங்களில் மட்டுமே விமானங்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓ.சி.ஐ. அட்டை வைத்து இருப்பவர்கள், 6 மாதம் விசா வைத்து இருப்பவர்கள் மற்றும் இந்தியாவில் தவிக்கும் வெளிநாட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.

கொரோனா தொற்று பரவிவருவதால் மார்ச் 22-ம் தேதி முதல் வெளிநாடு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து உள்நாட்டு விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You may have missed