டில்லி: ‘ஏர் இந்தியா’ வசம் இருந்த, 750 கோடி ரூபாய் மதிப்புள்ள அரிய ஓவியங்கள் திருடுபோய் உள்ளதாக  தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொதுத்துறை நிறுவனமான, ‘ஏர் இந்தியா’ கடும் நட்டத்தில் இயங்கி வருகிறது. இதுவரை, 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் உள்ளது. அரசு நிதி உதவி அளித்தும் கடன் சுமையில் இருந்து அந்நிறுவனம் மீளமுடியவில்லை.

இதையடுத்து, ஏர் இந்தியாவின் பங்குகளை விற்க, மத்திய அமைச்சரவை, சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில், ஏர் இந்தியாவிற்கு சொந்தமான, 750 கோடி ரூபாய் மதிப்புள்ள பழமையான ஓவியங்கள் மாயமாகியுள்ளது தெரிய வந்திருக்கிறது.

இது குறித்து ஏர் – இந்தியா ஊழியர்கள் சிலர் தெரிவித்ததாவது:

ஜதின் தாஸ்,

மும்பை உட்பட, பல்வேறு நகரங்களில் உள்ள ஏர் இந்தியா அலுவலகங்களில் பழமையான பல ஓவியங்கள் உள்ளன. பிரபல ஓவியர் ஜதின் தாஸ், தன்னுடைய ஓவியங்கள் சிலவற்றின் மாதிரிகளை, தனிப்பட்ட முறையில் ஒளிப்படம் (ஃபோட்டோ) எடுப்பதற்காக, ஏர் இந்தியா நிர்வாகத்தை அணுகினார்.

‘அவர் வரைந்த  புகழ் பெற்ற ஓவியங்கள் பல, ஏர் இந்தியா நிர்வாகம் வசம் இல்லை’ என்ற தகவல் தெரிய வந்திருக்கிறது.  இதையடுத்து, நடந்த சோதனையில், 3,500 ஓவியங்கள் காணாமல் போயிருப்பது  உறுதியாகியுள்ளது; இதன் மதிப்பு, 750 கோடி ரூபாய். இவ்வாறு  ஊழியர்கள் தெரிவித்தனர்.