ஏர் இந்தியா விமான சேவையை தனியார் மயமாக்கக் கூடாது! திமுக எம்.பி. வில்சன்

சென்னை: ஏர் இந்தியா விமான சேவையை தனியார் மயமாக்கக் கூடாது என்று  திமுக எம்.பி. வில்சன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று 2வது நாளாக நடைபெற்று வருகிறது. இன்றைய மாநிலங்களை கூட்டத்தின்போது, அரசு விமான சேவையான ஏர் இந்தியா விமான சேவையை தனியார் மயமாக்குவது தொடர்பாக காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றன.

இந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்.பி. வில்சன், மத்தியஅரசின் தனியார் மயமாக்கலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஏற்கனவே, தனியார் விமான சேவைகள் வழங்கிய நிறுவனங்கள் இழப்பையே சந்தித்துள்ளன என்று சுட்டிக்காட்டியவர், ஏர் இந்தியா விமான சேவையை தனியார் மயமாக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும்,  சென்னை விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.