வுகான்:

லக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் மாகாணத்தை முற்றிலுமாக ஆட்கொண்டுள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்களை அழைத்துவர நேற்று பிற்பகல் சென்ற ஏர்இந்தியா தனி விமானம்,  நள்ளிரவு அங்கிருந்து 324 இந்தியர்களுடன் புறப்பட்டது. இன்று  காலை  டெல்லி வந்தடைந்தது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உலக நாடுகளில் பரவி வருகிறது. இதையடுத்து, உலக நாடுகள் தங்களது நாட்டவரை சீனாவில் இருந்து வர தனி விமானங்களை அனுப்பி மீட்டு வருகிறது. அதுபோல இந்தியாவும் நேற்று ஏர் இந்தியா தனி விமானத்தை வுகான் நகருக்கு அனுப்பியது.

வுகான் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் சுமார் 700க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தவித்து வருவதாக கூறப்பட்டது. இந்திய தூதரக அதிகாரிகள், அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி பேசி வருகிறார்கள். சில இடங்களில் மட்டும் முகமூடி மற்றும் உணவு கிடைக்காமல் இந்தியர்கள் தவிப்பதாக சொல்லப்பட்டு வருகின்றது. வுகானில் உள்ள பெரும்பாலான இந்திய மருத்துவ மாணவர்கள் தொடர்ந்து தங்கள் கல்லூரி விடுதிகளில் தங்கி உள்ளனர்.

அவர்களை மீட்க இந்திய அரசு சீன அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, முதல்கட்டமாக நேற்று பிற்பகல் ஏர் இந்தியாவின் போயிங் 747 ரக விமானம் வுகான் நகருக்கு சென்றது. இந்த விமானம் 324 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு, வுனானில் இருந்து புறப்பட்டு தற்போது இந்தியா வந்துள்ளது. இன்று காலை டெல்லி வந்தடைந்துள்ளது.

இந்தியா வந்தடையும் பயணிகள் அனைவரும் உடடினயாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக விமான நிலையில் சிறப்பு மருத்துவர்கள் கொண்ட மருத்துவக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.

டெல்லி விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்கள்..