ஏர் இந்தியா நிறுவனத்தின் செலவு குறைப்பு முடிவுக்கு ஊழியர்கள் எதிர்ப்பு

டில்லி

ர் இந்தியா நிறுவனம் தனது செலவைக் குறைக்க எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துளனர்.

இந்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா கடன் தொல்லையால் கடும் இழப்புக்கு உள்ளாகிறது.   அதை சமாளிக்க அந்நிறுவனத்தின் ஐந்து துணை நிறுவன பங்குகளை விற்க அரசு முடிவு செய்தது.    ஆனால்  அதை வாங்க யாரும் முன்வராததால் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது.   அதை ஒட்டி ஊழியர்களுக்கு மே மாத ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை.

மேலும் நிதி பற்றாக்குறை வராமல் தடுக்க செலவுக் குறைப்பு நடவடிக்கை எடுக்க நிர்வாகம் முடிவு செய்தது.   முதல் கட்டமாக வெளிநாடு செல்லும் ஏர் இந்தியா ஊழியர்களுக்கு விடுதி செலவை குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது.    அதன்படி ஊழியர்களுக்கு 5 நட்சத்திர விடுதிகளுக்கு பதிலாக 3 நட்சத்திர விடுதியும்  ஒவ்வொருவருக்கும் தனி அறை என்பதற்கு பதிலாக ஆண்கள் அனைவருக்கும் தனி அறையும் பெண்கள் அனைவருக்கும் தனி அறையும் வழங்க முடிவு செய்தது.

ஏர் இந்தியா நிறுவனம் இதன் மூலம் ரூ.10 கோடியை மிச்சம் செய்ய திட்டமிட்டுள்ளது.   ஆனால் ஊழியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  அவர்கள் தங்களுக்கு 5 நட்சத்திர விடுதியில் முன்பு போலவே ஒவ்வொருவருக்கும் தனித் தனி அறை வேண்டும் என கூறி உள்ளனர்.