கரோனா வைரஸ் : ஷாங்காய் செல்லும் விமானத்தை 15 நாட்கள் ரத்து செய்த ஏர் இந்தியா

டில்லி

சீனாவின் ஷாங்காய் நகர் செல்லும் விமானச் சேவையை ஏர் இந்திய 15 நாட்களுக்கு ரத்து செய்துள்ளது.

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் இது வரை சுமார் 6000 பேருக்கு மேல் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் சுமார்50 பேருக்கும் மேல் மரணம் அடைந்துள்ளதாகவும் தக்வலகள் தெரிவிக்கின்றன.  மேலும் இந்த வைரஸ் மற்ற நாடுகளிலும் பரவக்கூடும் என கூறப்படுகிறது.

எனவே உலக நாடுகள் அனைத்தும் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  சீனாவில் இருந்து வரும் பயணிகள் கடுமையான பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.  சிறு சந்தேகம் எழுந்தாலும் தனிமைப் படுத்தப் படுகின்றனர்.

அவ்வகையில் ஏர் இந்தியா தனது ஷாங்காய் நகருக்குச் செல்லும் விமானச் சேவையை ரத்து செய்துள்ளது.    ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில்  AI 348/349 மும்பை – டில்லி – ஷாங்காய் விமானம் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 14 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.