டில்லி

மூக தளங்களில்  எதிர்மறையான தகவல் கொடுக்கும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஏர் இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீப காலமாக அனைத்து மீடியாக்களிலும் ஏர் இந்தியாவைப் பற்றி எதிர்மறைத் தகவல்கள் வெளிவந்த்க் கொண்டிருக்கின்றன.   அவற்றை பதிபவர்களில் பெரும்பாலானோர் ஏர் இந்தியாவிலிருந்து ஓய்வு பெற்றவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.   இந்த தகவல்களால் நிறுவனத்தின் பெயர் கெட்டு வருகிறது.

இதையொட்டி நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது

”ஒரு சில ஓய்வு பெற்ற ஊழியர்கள் நமது நிறுவனத்தைப் பற்றிய எதிர்மறைத் தகவல்களை முகநூல், ட்விட்டர் வாட்ஸ்அப், மற்றும் அனைத்து மீடியாக்களிலும் பரப்பி அதன் மூலம் நிறுவனத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி வருகிறார்கள்.   ஓய்வு பெற்ற பின்னும் இலவசப் பயணம், மருத்துவ வசதி மற்றும் பல வசதிகளையும் பெற்றுக் கொண்டு அதே நிறுவனத்தை இகழ்வது மிகவும் தவறான செயல்.   பணியில் இருந்த வரையிலும் வாயை மூடிக்கொண்டு இருந்து விட்டு, இப்போது நிறுவனத்துக்கு கெட்ட பெயரை உண்டாக்குவதற்காகவே இது போல பதிவுகள் போடப்படுகின்றன. இனி அது போல் பதிவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.   பதிவுகளை நிறுத்தாதவர்களுக்கு ஓய்வு பெற்ற பின்னும் அனுபவிக்கும் சலுகைகள் நிறுத்தப்படும்.  பின்னால் வறுந்தி பயனில்லை.” ,என அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.