கொழும்பு,

ரண்டு நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார் பிரதமர் மோடி. இன்று அங்கு சர்வதேச புத்த வெசாக் விழாவில் பங்கேற்றார்.

கொழும்பில் 14வது புத்த வெசாக் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்துகொள்ள உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இலங்கையில் குவிந்துள்ளனர்.

இந்த பிரசித்த பெற்ற புத்த வெசாக் விழா விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி நேற்று பிற்பகல் இலங்கை புறப்பட்டுச் சென்றார்.

இன்று விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, புத்தர் குறித்து பேசினார். மேலும் இந்தியாவில் உள்ள ஆன்மிக தளங்கள் குறித்தும், அதன் சிறப்புகள் குறித்தும் பேசினார்.

மேலும் ஆன்மீக யாத்ரிகளின் வசதிக்காக  இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு புதிய விமான போக்குவரத்து தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த விமான பயணமானது,  இந்தியாவின்  உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வாரணாசியில் இருந்து கொழும்புக்கு நேரடியாக செல்லும் வகையில் இயக்கப்படும் என்றும் கூறினார்.

புனித நதியாக கங்கைக் கரையில் அமைந்துள்ள வாரணாசி  இந்து சமயத்தினரின் ஆன்மிகத் தலைநகராகவும், அனைத்து இந்துக் கலைகளின் காப்பகமாகவும் விளங்குகிறது.

முக்தி தரும் ஏழு நகரங்களில் வாரணாசியும் ஒன்று. ஆகவே யாத்ரிகளின் வசதிகளுக்காக, இங்கிருந்து இலங்கைக்கு நேரடி போக்குவரத்து தொடங்கப்படும் என்று கூறினார்.

இதன் மூலம் எனது தமிழ் சகோதர சகோதரிகளும் வாரணாசி வந்து காசி விஸ்வநாத்தரை பார்வையிட முடியும் என்றும் கூறினார்.