டில்லி,

டந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டில்லியில் நடைபெற்ற இந்தியா, இலங்கைக்கு இடையேயான டெஸ்ட் தொடரின்போது, காற்று மாசு காரணமாக இலங்கை வீரர்கள் சுவாசிக்க சிரமப்படுவதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இனி இதுபோன்ற காற்று மாசு ஏற்பட்டால் அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று பிசிசிஐ செயலாளர் அமிதாப் சவுத்ரி கூறி உள்ளார்.

டில்லியில் நடைபெற்ற இ றுதி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின்போது, ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த இலங்கை வீரர்கள்  சுவாசிக்க சிரமப்பட்டதாகக் கூறப்பட்டது. அதன் காரணமாக இலங்கை வீரர்கள் முகமூடியுடன் களத்தில் இறங்கி விளையாடினர்.

பின்னர்  உணவு இடைவேளைக்குப் பின்னர் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் சுவாசிக்க சிரமப்படுவதாக கூறி பிரச்சினை ஏற்படுத்தினர்.

இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தோல்வி பயத்தில் இலங்கை வீரர்கள் இதுபோன்ற பிரச்சினைகளை உருவாக்குவதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 536 ரன்கள் எடுத்திருந்தபோது, கேப்டன் விராட் கோலி டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.

இந்நிலையில், இலங்கை வீரர்கள் காற்று மாசு குறித்து பிசிசிஐ-யிடம் புகார் கூறினர்.

அதையடுத்து,   பிசிசிஐ செயலாளர் அமிதாப் சவுத்ரி கூறியதாவது, இலங்கை வீரர்களின் புகாரை கருத்தில் கொண்டுள்ளோம், இனி வரும் காலங்களில் டில்லியில் கிரிக்கெட் போட்டி நடத்தினால், காற்று மாசு குறித்து  கருத்தில் கொள்ளப்படும் என்று கூறி உள்ளர்.