காற்று மாசுபாடு: இலவச போக்குவரத்து வசதியை ஏற்படுத்த ஜெர்மனி முடிவு

காற்று மாசுபடுவதை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு இலவச போக்குவரத்து வசதியை ஏற்படுத்த ஜெர்மனி முடிவெடுத்துள்ளது. முதலில் இந்த முடிவை 5 நகரங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதிகளவில் கார்கள் இருக்கும் நாடான ஜெர்மனியில் காற்று மாசுபடுவதுடன், அதிகளவில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை தீர்க்கும் பொருட்டு அரசு சார்பில் இயங்கும் வாகனங்களில் கட்டணம் வசூலிக்க போவதில்லை என்ற முடிவிற்கு ஜெர்மனி வந்துள்ளது.
germany
இலவச போக்குவரத்து வசதியை பயன்படுத்துவதால் அதிகளவில் கார்கள் இயக்கப்படாது என்றும், பெரிய அளவிலான அபராதங்கள் வசூலிக்கப்படுவது குறையும் என்றும் ஜெர்மனி அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. தேவையற்ற செயல்களால் காற்று மசுபடுவதை குறைப்பது ஜெர்மனியின் மிகப்பெரிய கடமை என்று சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பார்பாரா ஹெண்டிரிக்ஸ் தெரிவித்துளார். மேலும் இலவச போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவதன் மூலம் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த வருடத்தின் இறுதிக்குள் மேற்கு ஜெர்மனியின் தொழில்துறை நகரமான போன், எஸ்ஸன், மேன்ஹிம் உள்ளிட்ட பகுதிகளில் இலவச போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நடவடிக்கை ஜெர்மனியின் அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஒரு சில அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இலவசமாக போக்குவரத்து நடவடிக்கையை தவிர்த்து, தனியார் சார்பாக இயங்கும் பேருந்துகள், கார்கள் மற்றும் கனரக வாகனங்களில் உள்ள எரிபொருள்களின் அளவை அவ்வபோது கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசுபாடு அடையும் வகையில் ஏதாவது பொருள்கள் எரிக்கப்பட்டால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்று மாசுப்பாடு காரணமாக ஐரோப்பாவில் உள்ள 130 நகரங்களை சேர்ந்த மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏனெனில் காற்று மாசுபாட்டினால் 4 லட்சம் பேர் இறந்துள்ளதாக கூறும் ஐரோப்பா, ஆண்டு தோறும் மருத்துவ பரிசோதனைக்காக 20பில்லியன் யூரோக்களை செலவழிப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியங்களில் உள்ள நாடுகள் காற்று மாசுபடும்படி வரம்புகளை மீறி நடந்து கொண்டால் அபராதம் விதிக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-