காற்று மாசு: டில்லி மாநில அரசுக்கு தேசியபசுமை தீர்ப்பாயம் மீண்டும் ரூ.25 கோடி அபராதம்

டில்லி:

லைநகர் டில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசை கட்டுப்படுத்த தவறியதாக, டில்லி மாநில அரசுக்கு தேசியபசுமை தீர்ப்பாயம் மீண்டும் ரூ.25 கோடி அபராதம் விதித்துள்ளது.

ஏற்கனவே, மாநிலத்தில் சட்ட விரோதமாக இயங்கி வரும் தொழிற்சாலைகள்மீது நடவடிக்கை எடுக்காத  ஆம்ஆத்மி மாநில அரசுக்கு ரூ.50 கோடி அபராதம் விதித்து கடந்த அக்டோபர்  தீர்பபு வழங்கிய நிலையில், தற்போது மீண்டும் 25 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

டில்லியில்  அதிகரித்து வரும் காற்று மாசுவை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை காரணமாக டீசல் பெட்ரோல் வாகனங்கள் உபயோகப்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசுகள், ஊதுவத்திகளும் கொழுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக பொதுமக்கள் சுவாசிக்க பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். பலர் முகக்கவசம் அணிந்தபடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, காற்று மாசை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடும்படி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில்,  சரியான நடவடிக்கைகள் மூலம் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த தவறிய ஆம் ஆத்மி அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று 25 ரூபாய் கோடி அபராதம் விதித்துள்ளது.

இந்த தொகையை அரசு பணியாளர்களின் சம்பளத்தில் இருந்தும், சுற்றுச்சூழலை மாசு படுத்துபவர்களிடம் இருந்தும் பணத்தை பிடித்தம் செய்து செலுத்துமாறும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இந்த அபராத தொகையை கட்டத் தவறினால் மாதந்தோறும் 10 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரித்துள்ளது.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Air pollution: National Green Tribunal fined Rs 25 crore for Delhi state government, காற்று மாசு: டில்லி மாநில அரசுக்கு தேசியபசுமை தீர்ப்பாயம் மீண்டும் ரூ.25 கோடி அபராதம்
-=-