காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்

சென்னை:

ங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு இருப்பதால், வடகடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய  வானிலை மையம் அறிவித்து உள்ளது.

வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில்  உருவாகியுள்ள  காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தற்போது  மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகீறது. இந்த காற்றத்தழுத்த தாழ்வு மண்டலமான,  இலங்கையின் திரிகோணமலைக்கு தென்கிழக்கே 700 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து தென்கிழக்கே 960 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்துக்குத் தென்கிழக்கே ஆயிரத்து 130 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இந்த  காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு உருவாகி வருகிறது. இதன் காரணமாக  அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறி, அதற்கடுத்த, 36 மணி நேரத்தில் தீவிர புயலாகவும் மாற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து உள்ளது.

இந்த புயல்,  வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து ஆந்திராவின் ஓங்கோல் மற்றும் காக்கிநாடா இடையே டிசம்பர் 17-ம் தேதி பிற்பகலில் கரையைக் கடக்கும் வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது என்றும்  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் காரணமாக நாளை பிற்பகல் முதல்,  ஆந்திராவை ஒட்டிய வட தமிழக கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை  பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அந்த பகுதியில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றவர்கள் உடனடியாகக் கரை திரும்பவும் எச்சரித்து உள்ளது.