ஜோ பைடன் இல்லம் அருகே விமானம் பறக்கத் தடை

வில்மிங்டன்

னநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் இல்லத்துக்கு அருகே விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் தற்போதைய அதிபர் டிரம்ப் பின்னடைவில் உள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் முன்னணியில் உள்ளார்.

ஜோ பைடன் இல்லம் டெலாவேரில் வில்மிங்டன் பகுதியில் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்க விமானத் துறை ஜோ பைடன் இல்லத்துக்கு மேல் விமானங்கள் பறக்கத் தடை விதித்துள்ளது.

இல்லத்துக்கு மேல் ஒரு மைல் சுற்றளவுக்கு எந்த விமானமும் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை  வரும் புதன்கிழமை முதலில் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஜோ பைடன் அனேகமாக வெற்றி உரை ஆற்றுவார் என எதிர்பார்க்கப்படும் சேஸ் செண்டர் பகுதியிலும் இதே தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You may have missed