முதல் முறையாக நயன்தாராவுக்கு புரோமோஷன் : ஊர் ஊராக பவனி வரும் ஐரா ரதம்……!

 

இயக்குனர் சர்ஜூன் இயக்கத்தில் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நயன்தாரா நடித்துள்ள படம் ஐரா. நாளை ரிலீஸாகவிருக்கும் இப்படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது .

இப்படத்தில் நயன்தாராவுடன் யோகி பாபு, கலையரசன், மீனா கிருஷ்ணன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். சுந்தர மூர்த்தி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், எந்த நடிகைக்கும் இல்லாத அளவிற்கு முதல் முறையாக ஐரா படத்திற்கு1000 பதாகைகள், 700 பஸ், 500 ஆட்டோ, 8 வேன், பெரிய மாலில் எல்.இ.டி விளக்குகள் என படக்குழுவினர் புரோமோஷன் செய்துள்ளனர்.

மேலும், எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன், ரஜினியின் கபாலி ஏர் ஏசியா போன்று இந்த வாகனங்களின் மூலம், நயன்தாரா ஊர் ஊரா சுற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.