ஏர்செல் மேக்சிஸ் வழக்கை விசாரிக்கும் அதிகாரியை விசாரிக்க உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு

டில்லி

2ஜி மற்றும் ஏர்செல் மேக்சிஸ் புகார்களை விசாரிக்க மத்திய அரசு நியமித்துள்ள அமலாக்கத்துறை துறை அதிகாரி ராஜேஸ்வர் சிங் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க அரசுக்கு உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துஉள்ளது.

அமலாக்கத்துறையில் இணை இயக்குனராக இருந்த ராஜேஸ்வர் சிங் என்பவரை,  2ஜி அலைக்கற்றை ஊழல் மற்றும்  ஏர்செல் – மேக்சிஸ் விவகாரங்களை விசாரிக்க  மத்தியஅரசு உத்தரவிட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,  ராஜேஸ்வர் சிங் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், ராஜ்னேஷ் கபூர் என்பவர் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுடன் தன்னையும் சேர்க்கக்கோரி சுப்பிரமணிய சாமியும் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதற்கிடையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜேஸ்வர்சிங், வழக்கு தொடர்ந்த கபூர் மீது கிரிமினல் வழக்கு போட்டிருந்தார்.

இ;நத வழக்கு, நீதிபதிகள் அருண் மிஷ்ரா, எஸ்.கே கவுல் அமர்வு முன்னிலையில்  இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது,  ராஜேஸ்வர் சிங் தரப்பில் வாதாடும்போது, இந்த குற்றச்சாட்டு அபாண்டமானது என்றும்,  2ஜி மற்றும் ஏர்செல்  மேக்சிஸ் விசாரணையை தாமதப்படுத்தவே  இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், தன்னை குற்றமற்றவர் என்று ஏற்கனவே  சிபிஐ மற்றும் மத்திய ஊழல் கண் காணிப்பகம் சான்றிதழ் அளித்தது என கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து நீதிமன்றம், “ராஜேஸ்வர் சிங் மீதான குற்றச்சாட்டை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. எந்த விசாரணைக்கும்  ராஜேஸ்வர்  தயாராக இருக்க வேண்டும்” என கூறினர்.

மேலும், “ராஜேஸ்வர் சிங் மீதான குற்றச்சாட்டுகளை அரசு விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், .2ஜி மற்றும் ஏர்செல் மேக்சிஸ் வழக்கை விசாரிக்கும் குழுவில் இருந்து ராஜேஸ்வர் சிங்கை  விடுவிப்பது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும்” என்றும் அதிரடியாக கூறினர்.