ஏர்செல் – மேக்சிஸ் வழக்கு: கைதை தவிர்க்க முன்ஜாமீன் கேட்டு மாறன் சகோதரர்கள் மனு

புதுடெல்லி:

ன் டிவி குழுமம் மீது இன்று சிபிஐ குற்றபத்திரிக்கை தாக்கல் செய்வதால், கைதுக்கு பயந்த சன்டிவி டைரக்டர் கலாநிதி மாறன், காவேரி கலாநாதி, தயாதி மாறன் ஆகியோர்மு ன்ஜாமீன் கோரி புதுடெல்லி சிபிஐ சிறப்பு நீதி  மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கலாநிதி மாறன்X தயாநிதி மாறன்X காவேரி கலாநிதி

கடந்த காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியில் திமுகவை சேர்ந்த தயாநிதி மாறன் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது விதிக்கு புறம்பாக தனது அதிகாரித்தை தவறாக பயன்படுத்தி ஏர்செல் நிறுவன அதிபர் சிவசங்கரனை மிரட்டி, ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் என்ற நிறுவனத்திற்கு விற்க செய்தார். தன்னை கட்டாயப்படுத்தி, மிரட்டி மேக்சிஸ் நிறுவனத்திற்கு தனது பங்குகளை விற்பனை செய்ய வைத்ததாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிவசங்கரன் புகார் அளித்தார்.

ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் மலேசிய நிறுவனத்துக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்ததற்காக ரூ.743 கோடி சன் டிவி குழுமத்துக்கு முறைகேடாக கை மாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது சம்பந்தமாக மாறன் சகோதரர்கள் மீது விசாரணை நடத்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் காரணமாக ஏற்கனவே தங்களை  சிபிஐ கைது செய்து விடுவார்களோ என்று பயந்து சன் டிவி குழுமத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்து தலைமறைவாக இருந்தனர். ஆனால் அப்போது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் தற்காலிகமாக கைது நடவடிக்கையில் இருந்து தப்பினர்.

சட்டவிரோதமாக 743 கோடி ரூபாய் சன் டிவி குழுமத்திற்கு கைமாறியது தொடர்பாக, மத்திய அமலாக்கப் பிரிவினரும் விசாரணை செய்து  டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆதாரம் உள்ளதை உறுதிபடுத்திய நீதிமன்றம் தயாநிதிமாறன், கலாநிதிமாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி ஆகியோர், ஜூலை 11-ம் தேதி நீதிமன்றத்தில்  நேரில் ஆஜராக வேண்டும் என  உத்தரவிட்டது.

இதையடுத்து இன்று மூன்று பேரும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் ஆயினர். கு ற்றப்பத்திரிகை தாக்கல்  செய்பயப்டுபடுவதை தொடர்ந்து, தங்களை கைது செய்துவிடுவார்களோ என பயந்து, கைதை தவிர்க்க  கலாநிதி மாறன், காவேரி கலாநிதி, தயாதி மாறன் ஆகிய மூவரும் முன்ஜாமீன் கோரி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.