ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மேல்முறையீடு! அமலாக்கத்துறை அதிரடி

டில்லி,

ர்செல் மேக்சிஸ் வழக்கில் இருந்த கலாநிதி மாறன், தயாதிமாறன் உள்ளிட்டோரை

தயாநிதிமாறன் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேஷியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு மிரட்டி விற்கச் செய்ததாக புகார் எழுந்தது.

இதற்கு பிரதிபலனாக   742 கோடி ரூபாய் அளவுக்கு மேக்சிஸ் நிறுவனத்திடம் இருந்து சன் குழும நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு டில்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் மாறன் சகோதரர்கள் மீது நடைபெற்று வந்தது. இந்த வழக்கு 6 வருடமாக நடைபெற்று வந்தது.  வழக்கில் மாறன் சகோதரர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வது தொடர்பான உத்தரவை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தொடர்ந்து ஒத்திவைத்து வந்த நிலையில், கடந்த  பிப்ரவரி 2-ம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஓ.பி.ஷைனி, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் இருந்து மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோரை விடுவித்து உத்தரவிட்டார்.

இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதையடுத்து மத்திய அமலாக்கத்துறை,  தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோரை  தனி நீதி மன்றம்  விடுவித்ததற்கு எதிராக டில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.

அதில், ஏர்சல் மேக்சிஸ் வழக்கில்  சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் முறையாக பரிசீலனை செய்ய வில்லை என்று மனுவில் கூறியுள்ளது.  இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.