Random image

கார்த்தி சிதம்பரம் மீதான ‘ஏர்செல் மேக்சிஸ்’ வழக்கு: ஜூலை 31ந்தேதிக்கு ஒத்தி வைப்பு

டில்லி:

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன்  கார்த்தி சிதம்பரம் மீதான ஏர்செல்-மேக்சிஸ்  முறைகேடு வழக்கு ஜூலை 31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் முறைகேடு செய்து லாபம் அடைந்ததாக குற்றம் சாட்டபட்ட வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது குற்றம்சாட்டப்படடுள்ளது.

இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரிடம் அமலாக்க துறை மற்றும் சிபிஐ பல முறை விசாரணை நடத்தி உள்ளது.

இந்த நிலையில்,  கார்த்தி சிதம்பர மீது  கடந்த 13ம் தேதி டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.  அதைத்தொடர்ந்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த பாட்டியாலா  நீதிமன்றம்,  வழக்கை ஜூலை 31ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.  அன்றைய தினம் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள கார்த்தி சிதம்பரம் மீதான குற்றப்பத்திரிகை குறித்து விசாரணை நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறி உள்ளது.