ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை மேலும் நீட்டிப்பு

டில்லி:

ர்செல் மேக்சிஸ்  வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது  செய்வதற்கான தடை  பிப்ரவரி 18ந்தேதி வரை நீட்டித்து பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பணியாற்றி வந்தார். அப்போது, ஏர்செல் மேக்சிஸ் தொடர்பாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை முறைகேட்டில் ஈடுபட்டதாக சிபிஐ, அமலாக்ககத் துறை சார்பில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கை பாட்டியாலா நீதிமன்றம் விசாரித்து வருகிறது. வழக்கில் இருவர் மீதும் குற்றச் சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் இருவருக்கும் பாட்டியாலா நீதி மன்றம் ஜாமின் வழங்கியுள்ள நிலையில், தற்போது ஜாமினை பிப்ரவரி 18ந்தேதி வரை பாட்டி யாலா நீதிமன்றம் நீட்டித்து வழக்கு ஒத்தி வைத்துள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: AircelMaxisCase, bail extended, February 18, KartiChidambaram, PChidambaram, அமலாக்கத்துறை, கார்த்தி சிதம்பரம், சிபிஐ, ப.சிதம்பரம், பாட்டியலா நீதி மன்றம், பிப்ரவரி 18, மத்திய அரசு
-=-