ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய டிசம்பர்18 வரை தடை நீட்டிப்பு

டில்லி:

ர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை  டிசம்பர்  மாதம் 18ந்தேதி வரை மீண்டும் நீட்டித்து பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும்  சி.பி.ஐ.யும் . அமலாக்க துறையும், தனித்தனியாக வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கில் இருவர் மீதும் விசாரணை நடைபெற்று ஏற்கனவே குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பல மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. வழக்கு தொடர்பாக சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய பாட்டியாலா நீதிமன்றம் தடை விதித்து, அவர்களுக்கு முன்ஜாமின் வழங்கி உள்ளது.   ஒவ்வொரு முறை விசாரணை யின்போதும், சிதம்பரம் தரப்பில் இருந்தோ அல்லது அமலாக்கத்துறை, சிபிஐ தரப்பில் இருந்தோ அவகாசம் கேட்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வழக்கும் விசாரணை நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டே வருகிறது.

இந்த நிலையில், ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின்  மனுக்கள் மீது இன்று  மீண்டும் விசாரணையை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, இருவரையும் கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை டிசம்பர் 18ந்தேதி வரை நீட்டித்து வழக்கு  ஒத்தி வைக்கப்பட்டது.

கார்ட்டூன் கேலரி