டில்லி,

ர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த பண மோசடி வழக்கில்  சி பி ஐ முன்  விசாரணைக்க ஆஜராக முடியாது என்று கார்த்தி சிதம்பரம்  தெரிவித்து உள்ளார்.

மத்தியில் தேசிய ஜனநாய கூட்டணி ஆட்சியின்போது, ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தார். அப்போது மாறன் சகோதரர்களுக்கு ஆதரவாக  ஏர்செல் நிறுவனப் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்தது.

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு விவகாரத்தில்  கார்த்தி சிதம்பரத்தின் அட்வான்டேஜ் கன்சல்டிங் நிறுவனம் ஆதாயம் அடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ கார்த்தி சிதம்பரத்துக்கு. விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது.

 

இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தினைக் கண்காணிக்கப்படும் நபராக லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது.

இதை ரத்து செய்யக்கோரி கார்த்தி சிதம்பரம் தொடுத்துள்ள வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ளது. இந்நிலையில் இன்று  விசாரணைக்காக  சி பி ஐ முன் ஆஜராகுமாறு கார்த்திக்கு நோட்டீஸ் அனுப்பபட்டிருந்தது.

ஆனால் கார்த்தி சிதம்பரம் இன்று  சி பி ஐ முன் ஆஜராகவில்லை. அவருக்குப் பதில் அவருடைய வழக்கறிஞரான அருண் நடராஜன்  சி பி ஐக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி உள்ளார்.

அதில், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் ஆனைக்காக நாங்கள் காத்துக் கொண்டி ருப்பதால், செப்டம்பர் 26-ம் தேதியிட்டு எனது கட்சிக்காரருக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்றும், அத்துடன் எனது கட்சிக்காரரை நேரில் ஆஜராக வற்புறுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கில் இருந்து எனது கட்சிக்காரரான கார்த்தி சிதம்பரத்தை  நீதிமன்றம் விடுவித்துள்ள நிலையில்,  எனது கட்சிக்காரருக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பது என்பது முற்றிலும் சட்ட விரோதமானது. அத்துடன் எனது கட்சிக்காரருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் தீய நோக்கம் கொண்டதாகும்.

இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.