ஏர்செல் மேக்சிஸ் வழக்கு……டில்லி அமலாக்க துறை அலுவலகத்தில் ப.சிதம்பரம் ஆஜர்

டில்லி:

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் இன்று டில்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

ஏர்செல் -மேக்சிஸ் நிறுவனத்துக்கு 3,500 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுக்கு அனுமதி அளித்த விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் இன்று (5-ம் தேதி) நேரில் ஆஜராக வேண்டும் என சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதையடுத்து சிதம்பரம் இன்று டில்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு ஆஜரானார்.

முன்னதாக இந்த வழக்கில் ஜூலை 10ம் தேதி வரை சிதம்பரத்தை கைது செய்ய டில்லி நீதிமன்றம் தடை விதித்து முன் ஜாமீன் அளித்தது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Aircel-Maxis case: P Chidambaram appears before ED's Delhi office, ஏர்செல்- மேக்சிஸ் வழக்கு!! அமலாக்க துறை மேல்முறையீடு
-=-