ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ஜூன் 5ந்தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை

டில்லி:

ர்செல் மேக்சிஸ் வழக்கில்  ஜூன் 5ந்தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்து  டில்லி பாட்டியாலா கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மத்திய நிதி  அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, மாறன் சகோதரர்களுக்கு ஆதரவாக  ஏர்செல் நிறுவனப் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்தின் அட்வான்டேஜ் கன்சல்டிங் நிறுவனம் ஆதாயம் அடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு இருப்பதாக சிபிஐ தரப்பில் குற்றச்சாட்டு கூறியிருந்தது.

இந்த நிலையில், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில்,  முன்ஜாமின் கேட்டு முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் டில்லி பாட்டியாலா கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

சிதம்பரம் சார்பில் முன்னாள் சட்ட அமைச்சரும், பிரபல வழக்கறிஞருமான கபில்சிபில் ஆஜரனார்.  வழக்கை விசாரித்த நீதிபதி, சிதம்பரத்தை ஜூன் 5 வரை கைது செய்ய தடை விதித்ததுடன், விசாரணையையும் தள்ளி வைத்தார்.

கார்ட்டூன் கேலரி