Random image

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: காா்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி

டில்லி:

ஏா்செல் – மேக்சிஸ்,ஐஎன்எஸ் மீடியோ போன்ற வழக்குகளில் சிக்கி உள்ள  முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரத்தின் மகன்  காா்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது, அதை பயன்படுத்தி, அவரது மகனாக காா்த்தி சிதம்பரம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்மீது  மீது ஏா்செல் – மேக்சிஸ் வழக்கு, ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு, கருப்புபண மோசடி வழக்கு உள்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தனது மகளின் மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியா செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் காா்த்தி சிதம்பரம்  மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது.

அப்போது . அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கடும் எதிா்ப்பு தொிவித்தார். ஏற்கனவே  ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை; அவர் வெளிநாடு செல்ல இனிமேல் அனுமதிக்கக் கூடாது என்றும், அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் இந்த வழக்கில் குளறுபடிகள் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும்,  அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது.

ஆனால் அமலாக்கத்துறையின் கருத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம், நிபந்தனைகளுடன் வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரத்துக்கு அனுமதி வழங்கினர்.  அதன்படி செப்டம்பா் 20ம் தேதி முதல் 31ம் தேதிக்குள் வெளிநாடு செல்லலாம் என்று அனுமதி வழங்கி உள்ளது.

மேலும், காா்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லும் தேதி, இந்தியா திரும்பும் தேதி போன்றவற்றை  நீதிமன்றத்தில் தொிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா்.