டில்லி,

ர்சல் மாக்சிஸ் வழக்கில் இருந்த மாறன் சகோதர்களை விடுவித்து டில்லி சிபிஐ தனி நீதிமன்றம் விடுவித்தது.

தயாநிதிமாறன் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவன பங்குகளை மிரட்டி மலேஷியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு வலுக்கட்டாயமாக விற்கச் செய்ததாக புகார் எழுந்தது.

இதற்கு பிரதிபலனாக தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனின் சன் குழும நிறுவனங்கள் 742 கோடி ரூபாய் அளவுக்கு மேக்சிஸ் நிறுவனத்திடம் இருந்து முதலீடாக பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு டில்லி சிபிஐ தனி நீதிமன்றத்தில், நீதியரசர் ஓபி சைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் எந்தவித முகாந்திரமும் இல்லை என்று மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட அனை வரையும் தனி நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சிபிஐ ஏற்கனவே டில்லி உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் தற்போது அமலாக்கத்துறையுல் மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக டில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளதுழ.

இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறையின் மனு குறித்து பதிலளிக்கும் படி, மாறன் சகோதரர்கள் உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.