ஏர்செல்மேக்சிஸ் வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் கைது செய்ய ஆகஸ்டு 7 வரை தடை நீட்டிப்பு

டில்லி :

ர்செல் மேக்சிஸ் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை   ஆகஸ்ட் 7 வரை கைது செய்ய தடை டில்லி பாட்டியாலா நீதி மன்றம் தடையை நீட்டித்து உள்ளது.

மத்தியில் தேசிய ஜனநாய கூட்டணி ஆட்சியின்போது, ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தார். அப்போது மாறன் சகோதரர்களுக்கு ஆதரவாக  ஏர்செல் நிறுவனப் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய கட்டாயப்படுத் தியதாகவும், இதன் காரணமாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் பலன் அடைந்தாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்து அமலாக்கத்துறை ப.சி. மற்றும் கார்த்தி மீது வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் தங்களை கைது செய்யக்கூடாது என்று ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் சார்பில் டில்லி பாட்டியாலா  மன்றத்தில் தொடரப்பட்ட முன் ஜாமின் வழக்கில், ஏற்கனவே நீதி மன்றம் முன்ஜாமின் வழங்கி, கைது செய்ய தடை விதித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பான  இன்றைய விசாரணையை தொடர்ந்து, சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்டுள்ள தடை ஆகஸ்டு மாதம் 7ந்தேதி வரை தொடரும் என தடையை நீட்டித்து  டில்லி பாட்டியாலா நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கார்ட்டூன் கேலரி