டில்லி

ர்செல் மொபைல் நிறுவனம் திவாலானதாக அறிவிக்க உள்ளது.

இந்தியாவில் மொபைல் சேவை ஆரம்பித்த காலத்தில் இருந்தே ஏர் செல் நிறுவனம் சேவையை செய்து வருகின்றது.    இந்த நிறுவனத்துக்கு ஏற்கனவே கடன் அதிகமாகி உள்ளது.  இந்த ஏர்செல் நிறுவனம் பற்றிய வரலாற்றுக் குறிப்பு இதோ :

வணிக உலகில் புகழ் பெற்ற சின்னக்கண்ணு சிவசங்கரன் 1980களில் கணினி வர்த்தக துறையில் இறங்கினர்.   அமிர்த ராஜ் குழுமத்தில் இருந்து அவர் வாங்கிய ஸ்டெர்லிங் நிறுவனம் புகழ் பெறவே அவர் தலைமையகம் சிங்கப்பூர் ஆனது.  இப்போது அவர் செஷல்ஸ் குடியுரிமை கொண்டிருக்கிறார்.     அவர் மொபைல் உலகில் துவங்கியதே ஏர்செல் நிறுவனம் ஆகும்

முதலில் சென்னையை தவிர தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் கோல்ல்ச்சிய அவர் சென்னை ஆர் பி ஜி நிறுவனத்தை வாங்கி சென்னையிலும் கால் பதித்தார்.   அதன் பிறகு வந்த டாடா, ரியலயன்ஸ்,  ஏர்டெல் உட்பட பல நிறுவனங்களின் போட்டியை சமாளித்த ஏர்செல் தற்போது ஜியோவின் போட்டியை சமாளிக்க முடியவில்லை.    இறுதியில் ஏர்செல் நிறுவனம் மாக்சிஸ் நிறுவனத்துக்கு கை மாறியது.

அதே நேரத்தில் ரியலையன்ஸ் கம்யூனிகேஷண்ஸ் நிறுவனத்துக்கு இணையாக ஏர்செல் நிறுவனமும் கடனில் தத்தளிக்க ஆரம்பித்தது.  இந்த மாதம் ஏர்செல் தங்களின் தொலை தொடர்பு கோபுரங்களுக்கான வாடகையை கட்ட இயலாமல் சேவை முடங்கியது.   தற்போது ஓரளவு சேவை தொடங்கிய போதிலும் கடன் சுமை மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஏர்செல் நிறுவனம் திவாலாகி விட்டதாக அறிவிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.   அனேகமாக இன்றுடன் ஏர்செல் சேவை முழுவதுமாக நின்று விடலாம் என அச்சம் எழுந்துள்ளது.

இதனால் ஏர்செல்லுக்கு கடன் கொடுத்தவர்களும், முதலீட்டாளர்களும் இன்று பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்